Ad

சனி, 24 ஜூலை, 2021

சபரிமலை படி பூஜையின் போது ஐயப்பன் நிகழ்த்திய அற்புதம் | மாது பாலாஜி | Sakthi Vikatan

ராமனுக்கு ஒரு லட்சுமணன் என்றால், கிரேஸி மோகனுக்கு மாது பாலாஜி. கிரேஸி மோகனின் நாடகங்களில் அவரின் தம்பி மாது பாலாஜிதான் எப்போதும் ஹீரோ. கிரேசி மோகனின் நகைச்சுவையின் முகம் இவர்தான். எப்போதும் நகைச்சுவையோடு பேசும் பாலாஜியிடம் கொஞ்சம் ஆன்மிகம் குறித்தும் கேட்டோம். அடுத்த கணம் மடை திறந்த வெள்ளம்போலப் பேச ஆரம்பித்தார்.

“கடவுள் நம்பிக்கை உண்டான்னு சிலர் கேட்கிறாங்க. எனக்குக் கடவுள் நம்பிக்கை மாத்திரமில்லை. கடவுள் மேல பயமே இருக்கு. நாங்கள் எல்லோரும் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கிரேஸி மோகனின் கடவுள் நம்பிக்கையைப் பத்திப் பலருக்கும் தெரியும். அவர் சாமி கும்பிடாம எதையும் ஆரம்பிக்க மாட்டார்.

மாது பாலாஜி

நாங்கள் கும்பகோணத்தில் இருந்து வந்தவர்கள். எங்களோட குலதெய்வம் கோமளவல்லித்தாயார் சமேத ஆராவமுதன். அதேபோன்று ஒப்பிலிப்பன் கோயிலும் எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான கோயில். எங்கள் வீட்டில் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மொட்டைகள் அடிப்பது வழக்கம். ஒன்று ஒப்பிலியப்பன் கோயிலுக்கு இரண்டாவது திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்கு.

எங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்கள் எல்லாம் இருக்கு. கூடவே மகான்கள் படம் அதிகம் இருக்கும். எனக்கு குருமார்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. அவர்களின் நூல்களை எல்லாம் தேடிப்படிப்பேன். சொற்பொழிவுகளைத் தேடிக் கேட்பேன். பரமாச்சார்யாள், சாயிபாபா, ராகவேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணமகரிஷி, பாண்டிச்சேரி மதர், சுவாமி ஓம்காராநந்தா என்று எல்லோரின் படமும் என் பூஜை அறையில் இருக்கும். இவர்களை வணங்கிவிட்டுத்தான் என் தினசரி வாழ்க்கையைத் தொடங்குவேன்.

திருமலை திருப்பதி

கடந்த முப்பத்தி ஐந்து வருஷமா சபரிமலைக்குப் போய் வருகிறேன். சபரி ஐயப்பன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம். நாம் நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்றிக்கொடுப்பார். இதை சும்மா பேச்சுக்காகச் சொல்லவில்லை. ஒரு முறை சபரிமலைக்குப் போனபோது நடந்த அற்புதம் ஒண்ணு உண்டு. அதை அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.

மாது பாலாஜி பகிர்ந்துகொண்ட சபரிமலையில் நடந்த அந்த அற்புதம் குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/celebrity/miracle-at-sabari-malai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக