டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டியாக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று காலை 5 மணிக்குத் தொடங்கியது. இதில் 10 மீட்டர் பெண்கள் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் களமிறங்கினர்.
50 போட்டியாளர்கள் கொண்ட இந்த தகுதிச்சுற்றுப் போட்டியில் 60 ஷாட்கள் ஃபயர் செய்யவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கு 8 வீராங்கனைகள் தகுதிபெறுவார்கள்.
இதன்படி முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் 626.5 புள்ளிகள் பெற்று 16வது இடத்தையே பிடித்தார். இன்னொரு வீராங்கனையான அபூர்வி சந்தேலா 621.9 புள்ளிகள் பெற்று 36வது இடம் பிடித்தார். இதனால் இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்குள் நுழையமுடியவில்லை.
நார்வேயைச் சேர்ந்த ஜேனெட் ஹெக் என்பவர் இந்த தகுதிச்சுற்றில் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 10 மீட்டர் பெண்கள் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளவேனில், அபூர்வி என இரண்டு பேருமே இறுதிச்சுற்றுக்குள் நுழையாயதது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
source https://sports.vikatan.com/olympics/elavenil-valarivan-and-apurvi-chandela-failed-to-qualify-for-finals-in-tokyo-olympics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக