``தி.மு.க-வுக்கு எதிரி பா.ஜ.க-தான் என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்ந்துகொண்டிருக்கிறது" என்று மதுரைக்கு வந்திருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பரபரப்பான விஷயங்களைப் பற்றியும் பேசிவிட்டுச் சென்றார்.
பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க மதுரைக்கு வந்திருந்த அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்துவருகிறேன்.
சிந்தாந்த அடிப்படையிலான கட்சி்தான் பா.ஜ.க. தி.மு.க ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் மூன்றரைக் கோடிப் பேர் பலன் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பா.ஜ.க-வுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல் தலைவர்கள் அலைபேசி ஒட்டுக்கேட்பு என்ற புகாருக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். பெகாசஸ் மூலமாக ட்ராக் பண்ண முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பதிலத்திருக்கிறது.
தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பா.ஜ.க., யாருடைய பேச்சையும் ஒட்டுக் கேட்காது. யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
Also Read: ``இனி தி.மு.க Vs பா.ஜ.க-தான்...'' வேகமெடுக்கும் அண்ணாமலை; அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ள முடியுமா?
தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கட்சி பா.ஜ.க. ஒட்டுக்கேட்பு புகார் என்பது பொய்ச் செய்தி. தி.மு.க-வுக்கு எதிரி பாஜக-தான் என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
`ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பதுபோல தி.மு.க-வில் தற்போது மூன்று முதல்வர் இருக்கிறார்கள். தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்" என்று பரபரப்பாகப் பேசிவிட்டுக் கிளம்பினார்.
source https://www.vikatan.com/news/politics/bjp-party-state-leader-annamalai-press-meet-at-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக