கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைக் காலம் தாழ்த்திப் போடுவதால் அதன் செயல்திறன் நீடிக்குமா? எந்தத் தடுப்பூசிக்கு எத்தனை நாள்கள் இடைவெளி தேவை?
- சத்யமூர்த்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவரும், ஐசிஎம்ஆரின் நேஷனல் கோவிட் டாஸ்க் ஃபோர்ஸின் கிளினிகல் ரிசர்ச் குழுவைச் சேர்ந்தவருமான குமாரசாமி.
Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடலாமா?
``கோவாக்சினின் இரண்டாவது டோஸை 4 வாரங்கள் முடிந்ததும் போட வேண்டும். கோவிஷீல்டின் இரண்டாவது டோஸை 4 முதல் 12 வாரங்களுக்குள்ளும், ஸ்புட்னிக் வாக்சினின் இரண்டாவது தவணையை மூன்று வாரங்கள் முடிந்ததும் போட்டுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும். ரொம்பவும் தள்ளிப்போடுவது சரியானதல்ல. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது டோஸ் போடுவது சிலருக்கு சில இடங்களில் தள்ளிப்போகிறது. ஊரடங்கிலிருந்து நாட்டை இயல்புநிலைக்குத் திருப்ப இப்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் அது தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வதில் அரசு அதிகபட்ச அக்கறை காட்ட வேண்டும்.
Also Read: Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?
மாணவர்கள் உயர்கல்விக்கு வெளிநாடுகள் செல்லத் தொடங்கும் பருவம் இது. அவர்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் அவசியம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அட்மிஷன் கிடைக்கும் என்பதால் முன்னுரிமை கொடுத்து நான்கு வாரங்களில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. இது வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறவர்களுக்கு அல்ல".
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/will-delaying-covid-19-vaccine-second-dose-increase-its-efficacy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக