கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், தனியார் மருத்துவமனைகள் கட்டண பஞ்சாயத்து ஓயவில்லை. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மே மாதம் 24-ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
Also Read: மும்பை: ஹவுஸிங் சொசைட்டியில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்; போலீஸ் வழக்கு பதிவு!
இதையடுத்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபிராமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாள்களிலேயே ஆறுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, ஒரு மாதத்துக்கு பிறகு ஆறுசாமியின் உறவினர்கள் நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணத்துக்கான ரசீது கேட்டதாக தெரிகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் ரசீது கொடுக்க மறுத்துவிட்டதாக உறவினினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், ஆறுசாமியின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆறுசாமியின் உறவினர்கள் மருத்துவர் ஒருவரின் செல்போனை பறித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
திடீரென்று நோயாளியின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சாலையில் மோதிக்கொண்டனர். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், ஆறுசாமியின் உறவினர்கள் 7 பேர் மீது மருத்துவமனை மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் உண்மை தெரியவரும்.
source https://www.vikatan.com/news/tamilnadu/corona-patient-relatives-and-private-hospital-clash-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக