Ad

வியாழன், 24 ஜூன், 2021

சித்தர்கள் ஜீவசமாதியில் வழிபாடு செய்வது ஏன்... எப்படி? - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

25.6.21 ஆனி 11 வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை இரவு 10.50 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: மூலம் காலை 7.59 வரை பிறகு பூராடம்

யோகம்: அமிர்தயோகம் காலை 7.59 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

அம்பிகை

சந்திராஷ்டமம்: கிருத்திகை காலை 7.59 வரை பிறகு ரோகிணி

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

சித்தர்கள் ஜீவசமாதியில் வழிபாடு செய்வது ஏன்... எப்படி?

சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் தங்களின் ஸ்தூல உடலைத் துறப்பதையே ஜீவசமாதி அடைவது என்று சொல்கிறோம். அப்படி ஜீவ சமாதி அடைந்த சித்தர்கள் அங்கே வந்து வணங்கும் பக்தர்களுக்கு சூட்சுமமாய் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. ஜீவ சமாதிகள் இருக்கும் இடங்களில் நல்ல நேர்மறை அதிர்வுகள் இருப்பதாகவும் மனமும் உடலும் அங்கு சென்று வழிபடுவதன் மூலம் புத்துணர்வு கொள்வதகாவும் பக்தர்கள் சொல்கிறார்கள். பல ஜோதிடர்களும் பரிகாரமாக சில சித்தர்களின் ஜீவ சமாதிகளைக் குறிப்பிட்டு அங்கு சென்று வழிபாடு செய்ய அறிவுறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மகிமை நிறைந்த சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட வேண்டியது ஏன்...எப்படியெல்லாம் வழிபடலாம் என்பன குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

மேஷம்:

துணிவு : குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். மன உறுதியோடும் உற்சாகத்தோடும் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். - துணிவே துணை!

ரிஷபம்:

பிரச்னை : சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்து நீங்கும். பொறுமையைக் கையாளுங்கள். பணவரவுக்குக் குறைவிருக்காது. இறைவழிபாடு அவசியம் - டேக் கேர் ப்ளீஸ்!

மிதுனம் -

பணிச்சுமை : சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினர் உங்கள் வேலைப்பளுவைப் பகிர்ந்துகொள்வார்கள். செலவுகள் அதிகரிக்கும். - ஆல் இஸ் வெல்!

கடகம்

நிதானம் : செயல்களில் சிறு தடைகளும் தாமதமும் ஏற்படும் என்றாலும் வெற்றிகரமாக முடியும். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குங்கள். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

சிம்மம்:

பொறுமை : அதிக அளவில் பொறுமை தேவைப்படும் நாள். யாரோடும் விவாதம் வேண்டாம். உறவினர்களிடையே பேச்சில் கவனம் தேவை. - நா காக்க!

கன்னி:

சாதகம் : முயற்சிகள் சாதகமாகும். சகோதர வகையில் சிறு அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டாலும் அதன் மூலம் நன்மையே விளையும். - இனி எல்லாம் சுபமே!

துலாம்:

வரவு : பலவகையிலும் பணம் வரும் நாள். செலவுகளும் வரிசையாக வரும். சகோதர உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். பிரச்னைகளில் துணிந்து முடிவெடுப்பீர்கள். - சவாலே சமாளி!

விருச்சிகம்:

குழப்பம் : பணவரவு இருந்தாலும் அதைவிட அதிகமாகச் செலவுகளும் காணப்படும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

தனுசு:

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். பணவரவும் உண்டு. - என்ஜாய் தி டே!

மகரம்:

செலவு : புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனாலும் செலவுகளில் கட்டுப்பாடு தேவை. - செலவே சமாளி!

கும்பம்:

மகிழ்ச்சி : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் மனம் கோணாமல் நடந்து மகிழ்ச்சியூட்டுவார்கள். செலவுகள் அதிகரிப்பதால் சிக்கனம் தேவை. - ஜாலி டே!

மீனம்

அலைச்சல் : குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிறு அலைச்சலும் செலவும் மேற்கொள்ள வேண்டி வரும். ஆனாலும் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!



source https://www.vikatan.com/spiritual/astrology/how-to-worship-in-siddharkal-jeeva-samaadhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக