Ad

புதன், 23 ஜூன், 2021

கல்வராயன் மலை: மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் 37 கஞ்சா செடிகள்! - ரகசிய தகவலால் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மூலக்காடு அடுத்த ஆணைமடுவு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 1 1/4 ஏக்கர் விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்த மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தின் நடுவே கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், தோட்டத்தின் நடுவே ஆங்காங்கே இருந்த கஞ்சா செடியை கண்டறிந்து பிடுங்கி எடுத்ததோடு, கண்ணனையும் கைது செய்துள்ளனர்.

தோட்டத்தில் காவல்துறை அதிகாரிகள்

சம்பந்தப்பட்ட இடம், வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு உட்பட்டிருந்தாலும், சங்கராபுரம் காவல்நிலையத்தின் வட்ட ஆய்வாளர் பாலு என்பவர் விசாரிப்பதினால் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். "மொத்தம் 37 கஞ்சா செடிகளை, மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தின் உள்ளே இருந்து கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர் கண்ணனையும் கைது செய்துள்ளோம். இதற்கு முன்பாக, 'கண்ணனின் அப்பா (தற்போது இல்லை) காலத்தில் கஞ்சா விற்பனை செய்து, அவரின் அப்பா மீது புகார் இருந்ததாக' விசாரித்ததில் தெரியவந்தது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/a-man-arrested-for-growing-cannabis-on-farmland

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக