ஜேடர்பாளையம் அருகே காவிரியாற்றில் நீந்தி வேலைக்கு சென்று மாயமான கூலி தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து, அவரது உறவினர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
Also Read: கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயைக் கொலை செய்த பி.ஹெச்டி படித்த மகன்
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் அருகே இருக்கும் சரளைமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது: 37) இவரும், ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த கவின்குமார் (வயது: 28) இருவரும் ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் பகுதிக்கு கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதற்காக, தினமும் ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியில் உள்ள காவிரியாற்றில் நீந்தி வேலைக்கு சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
கவின்குமாரும், பாலசுப்ரமணியமும் கட்டட வேலைக்கு செல்வதற்காக காவிரியாற்றில் நீந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில், பாலசுப்ரமணியம் காவிரியாற்றில் நீந்தி எதிர் கரையான ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் பகுதிக்கு சென்ற போது, அவருக்கு பின்னால் நீந்தி வந்த கவின்குமாரை காணாததால் வேலையை முடித்து விட்டு, இரவு ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில், 'கவின்குமாரை காணவில்லை' என பாலசுப்ரமணியம் புகாரளித்தார். அதன்படி, ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார், திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பொத்தனூர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியதாக வந்த தகவல் அடிப்படையில் பொத்தனூர் காவிரியாற்றுக்கு, பரமத்தி வேலூர் காவல் நிலையம் போலீஸார் அந்த சடலத்தை கைப்பற்றி, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணையின்போது, அது ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கவின்குமாரின் உடல் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஜேடர்பாளையம் காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் கவின்குமார் உறவினர்கள், 'கவின்குமாருக்கும், பாலசுப்பிரமணிக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் கவின்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் முடிவிலே உண்மை என்னவென்பது தெரியவரும்!
Also Read: 86 நாட்களில் 10,000 பேர் மரணம்! - கேரளத்தில் தொடரும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு
source https://www.vikatan.com/news/crime/namakkal-youth-dead-in-cauvery-river-police-investigation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக