கிமு 551-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் பிறந்த கன்பூசியஸ் தத்துவ ஞானிகளில் பிதாமகர் என்று போற்றப்படுபவர். இவரது பிறந்த நாளில் இவரது பொன்மொழிகள் சில...
-
நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
-
ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சமே வராது.
-
உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்தததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!
-
ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
-
கடவுள் நன்மை மற்றும் தீமை என்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார்! நல்ல மனிதர்கள் சரியானதைத் தேர்வு செய்வர்.
-
உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.
-
ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
-
எல்லாமே அழகுதான், ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.
-
புகழில் மயங்கிவிடாதீர்கள், ஆனால் புகழ் பெறுவதற்கானத் தகுதியை வளர்த்துக் கொண்டே இருங்கள்!
Also Read: வழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன?!
-
கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தியுங்கள். கோபம் குறையும்!
-
புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.
-
எங்கோ யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவன் வெற்றியாளன் ஆகிறான்.
-
நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்!
-
லட்சியங்களை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையைத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர லட்சியங்களை சரி செய்யக்கூடாது.
-
அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர்.
-
வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
-
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.
-
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!
-
எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!
-
எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!
-
நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!
source https://www.vikatan.com/spiritual/miscellaneous/chinese-philosopher-and-politician-confucius-famous-quotes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக