201 நாள்களுக்குப் பின் 20,000 கீழ் குறைந்த தினசரி பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஒருபுறம் மெகா தடுப்பூசி திட்டம் வேகமெடுத்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20,000 -க்கு கீழ் சுமார் 201 நாள்களுக்குப் பின் பதிவாகியுள்ளது. தற்போது இந்தியாவில் 2,92,206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை இந்தியாவில் 3,36,97,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 179 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 4,47,373 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 87,07,08,636 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-28-09-2021-just-now-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக