Ad

புதன், 14 ஜூன், 2023

தரசச: தணடவளததல டயர வசயத ஏன?" - கதனவரகள சனனத எனன?!

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த மேலவாளாடி பகுதியில் ரயில் வந்தபோது தண்டவாளத்தின் நடுவே 2 லாரி டயர்கள் கிடந்தது. ரயில் இன்ஜின் டிரைவர் சுதாரிப்பதற்குள் தண்டவாளத்தில் கிடந்த டயரின் மீது ரயில் ஏறி இறங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இருந்தபோதிலும், ரயிலுக்கு விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் டயர்களை வைத்த மர்ம நபர்களை கைது செய்ய, போலீஸார் களத்தில் இறங்கினர். ரயில்வே இருப்புப்பாதை போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸார் சார்பில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 10 நாள்களாக 30-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் திருச்சி எஸ்பி

இந்நிலையில், தண்டவாளத்தில் டயர்களை வைத்ததாக மேலவாளாடியைச் சேர்ந்த வெங்கடேஷன், பிரபாகரன், கார்த்திக் ராஜா ஆகிய 3 பேரை ரயில்வே இருப்புப்பாதை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை குறித்து திருச்சி மண்டல ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். "குற்றவாளிகளை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. செல்போன் சிக்னல்களை வைத்து விசாரணை நடத்தினோம். சம்பவத்திற்குப் பிறகு ஊரில் இல்லாதவர்கள், சம்பவம் நடந்த ரயில்வே தண்டவாளம் பகுதியை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் என தீவிர சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தினோம். தனிப்படை போலீஸாரின் தீவிர விசாரணைக்கு பிறகு வெங்கடேஷன், பிரபாகரன், கார்த்திக் ராஜா ஆகிய மூன்று பேர் தான் இந்தச் செயலை செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில் 3 பேரையும் கைது செய்துள்ளோம்" என்றார்.

ரயில்வே எஸ்பி செந்தில்குமார்

தொடர்ந்து பேசியவர், "மேலவாளாடி பகுதியில் சரியாக சாலை வசதி செய்து கொடுக்கவில்லை, சரியான இடத்தில் ரயில்வே சுரங்கப் பாதையினை கட்டவில்லை என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை போட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதில் சதி அல்லது உள்நோக்கம் ஏதுமில்லை என்றாலும் மூன்று பேர் மீதும் இந்திய ரயில்வே சட்டம் 151 (i) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து மது அருந்துவது, தண்டவாளத்தின் குறுக்கே நின்று செல்பி எடுப்பது, உள்நோக்கத்தோடு தண்டவாளத்தின் குறுக்கே ஏதாவது பொருள்களை வைப்பது கண்டிக்கத்தக்கது. இதுமட்டுமல்லாமல் தண்டவாளத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/crime/what-is-happened-in-melavaaladi-track-issue-railway-sp-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக