வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... நாடு தழுவிய முழு அடைப்பு!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு சிக்கல்கள், இடையூறுகளை கடந்த விவசாயிகள் போராட்டம், 300 நாள்களை தாண்டி நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணிநேர போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள், ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில பகுதிகள் ரயில் மறியல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் மிகக் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-27-09-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக