Ad

புதன், 29 செப்டம்பர், 2021

மும்பை: கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறி நாய்க்கடி தடுப்பூசி! - செவிலியர், மருத்துவர் சஸ்பெண்ட்

மும்பையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மும்பை அருகிலுள்ள தானே மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கல்வாவில் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த முகாம் நடந்தது. தடுப்பூசி போடுவதற்காக ராஜ்குமார் என்பவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த டாக்டர் ராக்கியிடம், `தடுப்பூசி போட எங்கு செல்ல வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார்.

Also Read: Covid Questions: கொரோனாவுக்கு தடுப்பூசி ஓகே; ஆனால் மருந்து எப்போது வரும்?

டாக்டர் ராக்கி, ராஜ்குமாரிடம் என்ன தடுப்பூசி என்று கேட்காமலும், அவரிடமிருந்த மருத்துவக் குறிப்புகளைப் பார்க்காமலும் அருகிலிருந்த வரிசையில் போய் நிற்கும்படி கேட்டுக்கொண்டாராம். ராஜ்குமாரும் அந்த வரிசையில் சென்று நின்றார். அந்த வரிசையில் நின்றவர்கள் வெறி நாய்க்கடிக்கு (ரேபிஸ்) தடுப்பூசி போட்டுக்கொள்ளவதற்காக நின்றிருக்கின்றனர். இது தெரியாமல் ராஜ்குமார் அந்த வரிசையில் சென்று நின்றுவிட்டார். ஆனால் அவர் நாய்க்கடி தடுப்பூசிதான் போட வந்திருக்கிறாரா என்பதைச் சோதிக்காமலேயே செவிலியரும் தடுப்பூசியைப் போட்டுவிட்டார். தடுப்பூசியைப் போட்ட பிறகுதான் `எனது போனுக்கு மெசேஜ் வரவில்லையே?’ என்று கேட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி

அதன் பிறகு செவிலியர் என்னவென்று விசாரித்தபோதுதான் கொரோனா தடுப்பூசி போட வந்ததாக ராஜ்குமார் தெரிவித்தார். உடனே குறித்து டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சிக் கூடுதல் கமிஷனர் சந்தீப் கூறுகையில், ``மருத்துவக் குறிப்புகளைப் பார்க்காமலேயே தடுப்பூசி போட்ட செவிலியர் கீர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நோயாளி வரும்போது அவரின் மருத்துவக் குறிப்புக்களைப் பார்த்து ஊசி போடவேண்டியது நர்சின் கடமை. ஆனால் செவிலியர் கீர்த்தி அவ்வாறு செய்யாமல் கவனக்குறைவாக தடுப்பூசி போட்டிருக்கிறார்.

Also Read: Covid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி?

நாய்க்கடிக்கு போடப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை. தடுப்பூசி சென்டர் பொறுப்பு டாக்டர் ராக்கியும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பும், இதே பகுதியில்தான் தடுப்பூசி போட வந்தவருக்கு ஒரே நாளில் இரண்டு டோஸ் தடுப்பூசியை ஒரே நேரத்தில் போட்டு ஊழியர்கள் அதிர்ச்சியைக் கொடுத்தனர்.



source https://www.vikatan.com/news/healthy/a-nurse-who-vaccinated-against-rabies-to-a-person-who-came-to-mumbai-to-get-the-corona-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக