Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

Covid Questions: கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்'; என்ன தீர்வு?

கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மூளையை பாதிக்கும் `பிரெயின் ஃபாக்' (Brain Fog) பற்றி பலரும் பேசுகிறார்களே... அது என்ன? எல்லோரையும் பாதிக்குமா?

- கண்ணகி ( விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``சிந்தனையில், நினைவாற்றலில், கவன ஈர்ப்பில் சிறிய தடுமாற்றம் ஏற்படுதையே `பிரெயின் ஃபாக்' என்கிறோம். கோவிட் தொற்றிலிருந்து குணமான சிலருக்கு அதன் பிறகு இந்த நிலை ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

கொரோனா தொற்றிலிருந்து குணமானாலும் சிலருக்கு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் சில சவால்களும் சிக்கல்களும் இருக்கின்றன. கவனம் தேவைப்படுகிற விஷயங்களில் அவர்கள் திடீர் சிக்கல்களை எதிர்கொள்வதாகச் சொல்கிறார்கள். இதற்கான காரணம் இன்னும் சரிவர தெளிவுபடுத்தப்படவில்லை. மத்திய மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இந்த பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சீக்கிரமே குணமடைந்துவிடுகிறார்கள்.

Brain - Representational Image

Also Read: Covid Questions: பார்க்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா?

மனதை ஆக்டிவ்வாக வைத்திருக்கும் பயிற்சிகள் மற்றும் போதுமான ஓய்வு இரண்டும் பரிந்துரைக்கப்படும். கவன ஈர்ப்பை அதிகரிக்கும் பயிற்சிகளும் கொடுக்கப்படும்.

பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து பிஹேவியரல் தெரபியும் பரிந்துரைக்கப்படலாம். பயப்படத் தேவையில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/people-get-suffer-from-brain-fog-as-a-post-covid-effect-how-to-get-rid-off-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக