Ad

புதன், 29 செப்டம்பர், 2021

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும்! - லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

கரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையில் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருப்பது, கரூர் மாவட்ட அதிமுக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்

Also Read: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: குவிக்கப்பட்ட போலீஸ், அடுத்தடுத்த சோதனை! கரூரில் பரபரப்பு

திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்துச் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள்மீது ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி எனத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வீடு, நிறுவனங்கள், உறவினர்கள் வீடு என லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்திவருகிறது. அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், கடந்த ஜூலை 21-ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அந்தச் சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியதோடு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, வரும் செப்டம்பர் 30 -ம் தேதி, எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான இந்த வழக்கு, அடுத்தகட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/following-karur-mrvijayabaskar-house-raid-summon-send-for-enquiry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக