Ad

திங்கள், 27 செப்டம்பர், 2021

`ஆப்ரேஷன் டிஸ் ஹார்ம்’ - சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் உள்ளதா?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ரெளடிகள், கூலிப்படையினரின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்தன. அவர்களை ஒழித்துக்கட்டும் நோக்கில் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த நடவடிக்கைக்கு `ஆப்ரேஷன் டிஸ் ஹார்ம்’, அதாவது, ஆயுதங்களை பறித்தல் என்று பெயரிட்டனர். கடந்த 23-ம் தேதி நள்ளிரவு முதல் நடவடிக்கையில் இறங்கினர். ரௌடிகளிடம் இருக்கும் ஆயுங்களை பறித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதுதான் இந்த ஆப்ரேஷனின் நோக்கம். இந்தப் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். கடந்த 52 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க ரெய்டு நடத்தி கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய 3,325 ரௌடிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, நாட்டு துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் என 1,100 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக காவல்துறை

இதுபற்றி டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ``கூலிப்படையினர், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டோர், பழைய குற்றவாளிகள் என 21 ஆயிரத்து 592 பேர்களிடம் விசாரணை நடந்தது. அவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் நீதிமன்ற தடையாணை பிறப்பிக்கப்பட்ட 294 பேர் உட்பட 972 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று 2,353 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வழக்குகளில் சிக்கிய, ஒராண்டுக்கு மேலாக எவ்வித குற்றங்களிலும் ஈடுபடாமல் இருந்த 173 பேர் போலீஸாரின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் உள்ளது” என்கின்றனர்.

Also Read: தொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு!



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-police-implemented-secret-operation-to-solve-law-and-order-problem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக