குளிர்கால வானிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் எப்படியிருக்கும்?
- யாழினி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``பொதுவாகவே குளிர்காலத்தில் ஜலதோஷம் (Common Cold) மற்றும் ஃப்ளூ காய்ச்சலின் (Influenza) தீவிரம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதைப் போலவே குளிர்காலத்தில் கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கோவிட் வைரஸானது சூரிய வெளிச்சமும் வெப்பமும் குறைவாக உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருக்கும். தவிர குளிர்காலத்தில் மக்கள் கூடும் உள்ளரங்கங்களில் நீண்ட நேரம் இருக்கும். அங்கே காற்று குளிராகவும் உலர்ந்தும் இருக்கும். இந்தக் காரணங்களால் கோவிட் பரவலும் நோய்த்தொற்றும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
Also Read: Covid Questions: மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்; பிள்ளைகளுக்கு எந்த மாஸ்க் ஏற்றது?
ஒருவர் இருமுகிறபோது, தும்முகிறபோது, பேசும்போது, பாடும்போது, மூச்சுவிடும்போதுகூட நீர்த்திவலைகள் வெளிப்பட்டு வைரஸ் பரவலாம் அல்லது சிறுதுகள்களாக காற்றில் மிதந்தும் பரவலாம். இந்த சிறுதுகள்கள் குளிர்காலத்தில் காற்றில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.
மக்கள் பொதுவிடங்களில் கூடும்போது அங்கே காற்றோட்ட வசதி இல்லையென்றால் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் எளிதாகவும் வேகமாகவும் பரவும். எனவே இதுபோன்ற காலகட்டத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
Also Read: Covid Questions: ஒரு வருடத்திற்கும் மேலாக சானிட்டைசர் பயன்படுத்துகிறேன்; எனக்கு சரும பாதிப்பு வருமா?
கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் மேலும் தாமதிக்காமல் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட, போடாத அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/will-corona-virus-spread-increase-in-winter-season
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக