தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா!
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று நடைபெறுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பாதுகாப்புக்காக கமாண்டோ படை வீரர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
5 நாள் பயணமாக தமிழகம் வரும் குடியரசுத் தலைவர், இன்று நூற்றாண்டு விழாவை முடித்துவிட்டு , நாளை கோவை வழியாக நீலகிரி செல்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-02-08-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக