Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

உடல்நலம் ஓகே... உங்கள் குடும்பத்தின் பணநலத்தையும் பாதுகாக்க வேண்டாமா? - வழிகாட்டி நிகழ்ச்சி

சித்த மருத்துவர் கு.சிவராமன்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘‘ஆரோக்கியம், முதலீடு, செல்வம்..!” என்ற நிகழ்ச்சி, நவம்பர் 29 காலை 10 - 12 மணிக்கு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

Health

சித்த மருத்துவர் கு.சிவராமன், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சித்த மருத்துவர் கு.சிவராமன், உடல் நலம் எப்படி செல்வத்தை பெருக்க உதவும் என்பதை விளக்கிப் பேசுகிறார். முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், முதலீடு எப்படி உங்களுக்கு செல்வத்தை கொண்டு வரும் எனப் பேசுகிறார்.

இந்த நிகழ்வில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த உதவி துணைத் தலைவரும் முதலீட்டாளர், கல்வி பிரிவு தலைவருமான கே.எஸ்.ராவ், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர், கல்வி பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள்.

அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு சிறு முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்து வருகிறது. அதேநேரம், கோவிட் வைரஸ் பரவல் பாதிப்பு நம் உடல் நலம் மற்றும் பண நலத்தை பாதித்துள்ளது. இந்த இரண்டிலிருந்தும் நலம் பெறவேண்டும் என்றால் நாம் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி வழிகாட்டுகிறது.

ஆரோக்கியம்,செல்வம்

ஆரோக்கியத்தைப் பேணும் வழிகள், செல்வத்தைப் பெருக்கும் முதலீடுகள் பற்றி இந்த நிகழ்வில் எடுத்துச் சொல்லப்படுகிறது.

இதில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்!

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2



source https://www.vikatan.com/business/finance/nanayam-vikatan-event-on-family-health-and-wealth-management

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக