Ad

வியாழன், 26 நவம்பர், 2020

பிக் பாஸ்... க்வாரன்டீனிலிருந்து வெளியேறிய அஸீம்... காரணம் என்ன?

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய ஷோவில் பிறகு அர்ச்சனா, சுச்சித்ரா ஆகிய இருவரும் இணைந்தனர்.

இன்னொரு பக்கம் எவிக்‌ஷன் தொடங்கி ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுச்சி ஆகியோர் வெளியேறி விட்டனர். வரும் வார நாமினேஷனில் யார் வெளியேறுகிறார் என்பது நாளை மறுநாள் எபிசோடில் தெரியவரும்.

இந்நிலையில் ஷோவுக்குள் புதிய போட்டியாளராக ஷிவானியுடன் சீரியல்களில் ஜோடியாக நடித்த நடிகர் அஸீமும் களமிறங்கப் போவதாக விகடனில் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டோம்.

வரும் வாரத்தில் நிகழ இருக்கும் அந்த என்ட்ரிக்காக சில தினங்களுக்கு முன் அஸீம் க்வாரன்டீன் சென்றார். சென்னை கிண்டியில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார்.

அம்மாவுடன் அஸீம்

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அஸீம் திடீரென ஹோட்டலில் இருந்து வெளியேறியதாகவும், சென்னை அண்ணா நகர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

இது தொடர்பாக அஸீமின் நெருங்கிய நட்பு வட்டத்தில் விசாரித்தோம். "அவருடைய அம்மாவுக்கு அவசரமான ஒரு மருத்துவ சிகிச்சை. அப்ப பக்கத்துல அஸீம் இருந்தா நல்லதுனு மருத்துவர்கள் சொன்னாங்க. க்வாரன்டீன்ல இருந்தவர்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னதும், அவருக்கும் அது அவசியம்னு உடனடியாக் கிளம்பி வந்தார்’' என்கிறார்கள்.

தற்போது அஸீமின் தாய் ஜன்னத் நலமுடன் இருக்கிறாராம். எனவே வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் (28/11/20) அஸீம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது உறுதியாகியுள்ளது. ஞாயிறு எபிசோடில் அஸீம் எண்ட்ரியை எதிர்பார்க்கலாம்.



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/azeem-moves-out-of-bigg-boss-quarantine-bubble-another-headache-to-bigg-boss-tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக