நடிகர் விஜய் ரசிகர் மன்ற அகில இந்தியப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (28.11.20) இரவு 11 மணியளவில் மாநிலம் முழுக்க உள்ள ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, `ஒரு அவசர செய்தியை உங்களிடம் விஜய் சொல்லச் சொல்லியிருக்கிறார். விழுப்புரத்தில் ஒரு மண்டபத்தில் திடீரென ஏற்பாடு செய்திருக்கிறோம். உடனே கிளம்பி வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
பதற்றமான நிர்வாகிகள் விழுப்புரம் நோக்கி உடனே கிளம்பினர். இன்று காலை நிலவரப்படி அருகில் உள்ள 10 மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரத்துக்கு வந்துவிட்டனர். மற்றவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.
Also Read: 'தைப் பொங்கலுக்குப் பிறகு தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!
ஏன் இந்தத் திடீர் அழைப்பு?
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில் விசாரித்தோம். ``கடந்த வாரம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி, விஜய் பெயரில் பதிவு செய்த கட்சியை வாபஸ் பெறுவதாக டெல்லி தேர்தல் கமிஷனுக்கு மனுக் கொடுத்தார். விஜய் கொஞ்சம் நிம்மதியடைந்தார். ஆனால், எஸ்.ஏ.சி சும்மா இருக்கவில்லை. கட்சி ஐடியாவை கேன்சல் செய்துவிட்டு, ஒரு அமைப்பு ஆரம்பிக்கும் வேலையில் இறங்கிவிட்டார். முழுக்க முழுக்க புஸ்ஸி ஆனந்தின் அதிருப்தியாளர்களை வைத்து இந்த அமைப்பு ஆரம்பிப்பதுதான் எஸ்.ஏ.சி-யின் ஐடியா. அடுத்த வாரம், இந்த அமைப்பை டெல்லி தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்போகிறார். இதை கேள்விப்பட்டு டென்ஷன் ஆன விஜய், தனது சார்பில் சில உத்தரவுகளை மன்றத்தினரிடம் சொல்லும்படி புஸ்ஸி ஆனந்த்திடம் சொல்லியிருக்கிறார். அதைதொடர்ந்துதான், விழுப்புரம் கூட்டம்’’ என்கிறார்கள்.
``யாரும் எந்த ஒரு அமைப்பிலும் சேரக்கூடாது. நேரிடையாகவோ, மறைமுகமாகவே தொடர்பு வைத்திருக்கக் கூடாது. வரும் தேர்தலில் நிலைப்பாடு என்ன என்பதை பிறகு அறிவிப்போம்'' என்பதைத்தான் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்மன்ற நிர்வாகிகளிடம் சொல்லப்போகிறாராம்.
Also Read: விஜய் Vs எஸ்.ஏ.சி: சமரசப் பேச்சுவார்த்தையில் இழுபறி... வீட்டில் கட்சி அலுவலகம்!
source https://www.vikatan.com/news/politics/vijay-makkal-iyakkam-meeting-to-be-held-in-viluppuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக