Ad

சனி, 28 நவம்பர், 2020

ஒரே டிஸைனில் 3 கொலைகள்! - அதிரவைத்த திருப்பூர் `சைக்கோ’ இளைஞர்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரிக்கு எதிரே சின்ராசு என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அதனை சங்கர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். நவம்பர் 3-ம் தேதி இந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விஷயமறிந்து வந்த போலீஸார், வீட்டில் ஆள் இல்லாததால், கதவை உடைத்து ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது வீட்டிலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் சிதைந்து போன நிலையில் பிணம் ஒன்று மிதந்துள்ளது. இறந்தவர் யார்?... எப்படி கொலை செய்யப்பட்டார்?... என அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த பிணம் இருந்துள்ளது.

`இறந்தவர்கள் யார் என்கின்ற அடையாளம் தெரிந்துவிடக்கூடாதென மூவரையுமே ஒரே மாதிரி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறான்’ - போலீஸ்

வீட்டின் உரிமையாளர் சின்ராசுவிடம் விசாரிக்கையில், `சங்கர் என்பவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். அவரும் அவருடைய நண்பர் இசக்கிமுத்து என்பவரும் தான் குடியிருந்தனர். 10 நாள்களாக சங்கரும், இசக்கிமுத்துவும் வீட்டிற்கு வரவேயில்லை’ என்றிருக்கிறார். சங்கர், இசக்கிமுத்துவைப் பிடித்தால் கொலையானது யார்? கொலை செய்தது யார்? என தெரிந்துவிடும் என திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில் இருவரின் போன் நம்பர்களையும் வைத்து முதலில் விசாரித்திருக்கின்றனர். சங்கர் கடைசியாகப் பேசிய நபரிடம் போலீஸார் விசாரிக்கையில், `ஒரு கேஸ் விஷயமா என்னை அனுப்பர்பாளையம் ஸ்டேஷனில் உட்கார வச்சிருக்காங்க. நான் அப்புறமா பேசுறேன்னு சொன்னார். ஆனா, அதுக்கப்புறம் அவர் பேசவே இல்லை’ என்றிருக்கிறார்.

Also Read: தென்காசி: மது விருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

அனுப்பர்பாளையம் காவல்நிலையத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார், சங்கர் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது, `சங்கரை ஒரு கொலை வழக்கில் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளோம்’ என கூறியுள்ளனர். இதையடுத்து சங்கரை நீதிமன்றக் காவலில் எடுத்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை செய்திருக்கின்றனர்.

விசாரணையில்,``2018-ல் அனுப்பர்பாளையம் லிமிட்டில் ஒருவரைக் கொலை செஞ்சுட்டு, ஜெயிலுக்கு போய்ட்டு, 90 நாள்ல ஜாமீன்ல வெளிய வந்தேன். அதுக்கடுத்து போன மாசம், என் நண்பர்கிட்ட தப்பாஒ பேசுன ஒருத்தனை வெங்கமேடு பக்கத்துல தலையில் கல்லைப் போட்டு கொன்னுட்டு, பக்கத்துல இருந்த காட்டுல புதைச்சேன். அப்புறம் என்கூட ரூம்ல இருந்த இசக்கிமுத்துவையும் குடிபோதையில் தகராறு நடந்தப்ப, தலையில் கல்லைப் போட்டு கொன்னு, தண்ணி தொட்டியில நான்தான் போட்டேன். 3 கொலையையும் நான்தான் செஞ்சேன்’ என கூற, போலீஸார் அதிர்ந்து போயுள்ளனர்.

கொலை

இது குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``சங்கர் குடிக்கு அடிமையாகி ஒரு சைக்கோபோல இருந்திருக்கிறார். அவர் கொலை செய்த மூவருமே, அவருக்கு ஒரு வகையில் நண்பர்களாகத்தான் இருந்திருக்கின்றனர். இறந்தவர்கள் யார் என்கின்ற அடையாளம் தெரிந்துவிடக்கூடாதென மூவரையுமே ஒரே டிஸைனில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருக்கிறான்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/tiruppur-youth-killed-3-in-last-2-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக