Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

20 வகை மூலிகைகள், 2,000 நாற்றுகள்... மூலிகை வளர்ப்பில் கலக்கும் கூடலூர் வனத்துறை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்காக்கள் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலும், தொட்டபெட்டா, படகு இல்லங்கள் போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டிலும் இயங்கிவருகின்றன. இது மட்டுமல்லாமல், வனப்பகுதியில் செயல்பட்டுவரும் சுற்றுலாத் தலங்கள், சூழல் சுற்றுலாவின் அடிப்படையில் வனத்துறையும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவும் நிர்வகித்து வருகின்றன.

herbal garden

அரிய வகை தாவரங்களைப் பாதுகாக்கும் வகையில் 1989-ம் ஆண்டு கூடலூரில் ஜீன்பூல் பூங்கா நிறுவப்பட்டு, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வந்தன. பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இந்தப் பூங்காவில் அரியவகை மரங்கள், தாவரங்கள், மூலிகைகள் போன்றவற்றைப் பராமரித்து வருகின்றனர்.

கொரோனா முடக்கம் காரணாமாக ஜீன்பூல் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட வகையான மருத்துவ மூலிகைகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். மேலும் பூங்கா, சுற்றுலா பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதும், பொதுமக்களுக்கு இந்த மூலிகைகளை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

herbal garden

இதுகுறித்து கூடலூர் வனத்துறை அதிகாரி ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "இந்தப் பூங்காவில், கொடிவேரி, நித்திய கல்யாணி, ஆடா தோடா, முறிகூட்டி, திப்பிலி, வாதமடக்கி, பன்னீர்பழம், அறுவதாம் பச்சை, நொச்சி, வசம்பு எனப் பல மூலிகைகள் உள்ளன. மேலும் சளி, இருமல் மற்றும் கடுமையான நோய்களுக்கு பாரம்பர்ய மருத்துவத்தில் ஆசியா முழுவதிலும் பயன்படுத்தப்படும் மூலிகைகளை இங்கு பராமரித்து வருகிறோம். தற்போது, நர்சரியில் 2,000-க்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் உள்ளன" என்றார்.

கூடலூர் வனப்பிரிவின் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், ``இந்தப் பூங்காவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், இங்கு மூலிகை நாற்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம்.

herbal grden

உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுளோம். பொது முடக்க தளர்வுக்குப் பின் இது பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/forest-department-develops-herbal-garden-in-gudalur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக