வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதிதீவிரப் புயலான நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையைக் கடந்தது. புதுச்சேரியில் இருந்து வடக்கே 50 கி.மீ தூரத்தில் நிலப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் நிவர் தீவிரப் புயல், 3 மணி நேரத்தில் வலுவிழந்து சாதாரண புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Also Read: நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை
இந்தநிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று (நவம்பர் 26) நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்துப் போக்குவரத்து மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது.
source https://www.vikatan.com/news/disaster/bus-services-in-tn-districts-to-resume-from-12-noon
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக