Ad

வியாழன், 26 நவம்பர், 2020

வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு... ஹோட்டலில் போட்டியாளர்கள்... பிக்பாஸ் தொடருமா? #BiggBossTamil

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேச வைத்துக் கொண்டிருந்த பிக்பாஸுக்கே பெரிய டாஸ்க் தந்துவிட்டது இயற்கை.

ஆமாம்... இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதாலும் (ஏரிக்கும் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் இடத்துக்குமிடையிலான தூரம் சில கிலோமீட்டர்கள்தான்) நேற்று (25/11/20) காலையிலிருந்தே ஒருவித அசாதாரண சூழல் அந்த வீட்டுக்குள் நிலவியிருக்கிறது.

பிக்பாஸ்

போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலர், "நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்... ஆளை விட்டுடுங்க'' என்றே சொன்னார்களாம்.

நிலைமையை உணர்ந்து கொண்ட சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது.

அதன்படி நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள்.

தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

பிக்பாஸ்

இந்த மழை சூழலால் நேற்று ஒளிபரப்பாக வேண்டிய காட்சிகளில் பலவற்றை எடுத்து இன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பழைய காட்சிகள் சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.

ஆனால், இன்று மாலையும் பிக்பாஸ் வீட்டுக்குள் போகமுடியாத சூழல் உருவாகிவிட்டால் அடுத்து என்ன செய்வது என்கிற பெரும் குழப்பத்தில் இருக்கிறது விஜய் டிவி.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-contestants-to-stay-in-hotel-due-to-nivar-cyclone-floods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக