செம்பரம்பாக்கம் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படுமென அரசு தரப்பில் அடையார் நீர்வழிப்பாதை எல்லையோர மக்களுக்கு ரெட் அலர்ட் அறிவித்திருந்தனர். ஆனால், குன்றத்தூர் தரைப்பாலத்தால் ஆபத்து என்று மக்கள் எவ்வளவோ முறை எச்சரித்தும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் காதுகொடுத்து கேட்காதது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. பத்து வருஷமாக தரைப்பாலத்தை உயர்த்திக்கட்டும்படி பலமுறை கோரிக்கை வைத்தும் சரிசெய்யவில்லை. அதன் விளைவாக, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து முக்கிய சாலையை துண்டித்துவிட்டது என்று புலம்புகிறார்கள் குன்றத்தூர் மக்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு வழியாக உபரி நீரை நவம்பர் 25-ம் தேதியன்று அரசு அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர். தண்ணீர் வெளியேறும் முகத்துவாரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் - சென்னை விமான நிலையம் செல்லும் முக்கிய சாலை உள்ளது. அந்த சாலையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. அந்த தரைப்பாலத்தின் வழியாக வெள்ள நீர் தாண்டிப்போனபிறகு, குன்றத்தூர் மாதா காலேஜ் பின்புறத்தில் இருக்கும் அடையார் நீர் வழிப்பாதை துவக்கத்தில் போய் சேர்கிறது.
இந்தமுறை, ஏரியின் உபரி நீர் அந்த தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஒடியதால், அதனை சுற்றியுள்ள சோமங்கலம், நந்தம்பாக்கம், அமரம்பேடு உள்ளிட்ட பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன. இப்படி இன்று நேற்றல்ல! கடந்த 10 வருடங்களாக இதே அவல நிலைமைதான். சட்டமன்றத்தில் இரண்டுமுறை இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டும்படி முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோரிக்கை வைத்தார். இந்த ஆண்டு ஜனவரியில் தரைப்பாலத்தை நான்கு அடி உயரம்உயர்த்தி பாலம் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அதற்காக, தற்காலிக தரைப்பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந்த பாதையையும் தற்போது வெள்ளத்தில் அடித்துசென்றுவிட்டது. அதையடுத்து, பல கி.மீ. தூரம் சுற்றி பயணிக்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்
source https://www.vikatan.com/news/general-news/in-kuntrathur-people-affected-due-to-ground-bridge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக