Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

`தற்கொலை செய்யப்போவதாக டிவிட்டர் பதிவு' - இளைஞரை மும்பை போலீஸார் காப்பாற்றியது எப்படி?

வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால் உடனே தற்கொலை செய்து கொள்வது ஒன்றுதான் என்று தீர்வு என்று சிலர் நினைக்கின்றனர். சிலர் இதனை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி ட்விட்டரில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற கேரள இளைஞர் ஒருவர் மும்பையில் மீட்கப்பட்டுள்ளார். ட்விட்டரில் ஒருவர் தனது காதலி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகப் பதிவிட்டார். இதனை கவனித்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் உடனே இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீஸார் அந்த வாலிபர் மும்பையில் எங்கு இருக்கிறார் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

Also Read: புதுக்கோட்டை: 400 ரூபாயைத் திருப்பிக்கேட்ட இளைஞர் கொலை; தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

சித்தரிப்பு படம்

அவரது மொபைல் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீஸார் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இடைப்பட்ட நேரத்தில் அவர் விபரீத முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சி பெண் பிரமுகர் ஒருவர் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் அவருடன் சாட்டிங் செய்து கொண்டிருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண்ணும் அந்த இளைருடன் தொடர்ந்து சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவர் தாதரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பது தங்கி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர் முந்தைய நாள் இரவுதான் ஹோட்டலில் அறை எடுத்திருந்தார். உடனே ஹோட்டல் மேலாளர் உதவியுடன் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறை கதவை திறந்து பார்த்த போது தற்கொலை செய்துகொள்ள அருகில் கத்தியை வைத்துக்கொண்டு அந்த இளைஞர் மொபைல் போனில் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். தற்கொலை செய்யவிருந்த இளைஞரை மீட்டு விசாரித்தபோது காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த விபரீத முடிவுக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி கவுன்சிலிங் கொடுத்தனர்.



source https://www.vikatan.com/news/india/in-mumbai-a-young-man-was-rescued-by-police-from-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக