டெல்லியில் காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் காவலர்களுக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, காவலர்/ தலைமைக் காவலர் பதவியிலிருக்கும் காவலர்களில் காணாமல்போன 50 குழந்தைகள் அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளை யார் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
WHC Seema Dhaka is currently posted in the Outer North District. She has been granted Promotion out-of-turn by CP Delhi for recovery of 76 missing children in the last 3 months @CPDelhi @LtGovDelhi @PMOIndia @HMOIndia #WearAMask #SocialDistancing #WashYourHands pic.twitter.com/NvX54FA0a6
— #DilKiPolice Delhi Police (@DelhiPolice) November 18, 2020
14 வயதுக்கும் குறைவான குழந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் (அவர்களில் 15 குழந்தைகள் 8 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்) என்று டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது. டெல்லியில் காணாமல்போகும் சிறார்களைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திட்டம்.
Also Read: கொரோனா காலத்திலும் குழந்தைகள் மீது அதிகரிக்கும் பாலியல் அத்துமீறல்கள்... அரசின் கவனத்துக்கு!
இந்தப் புதிய ஊக்கத் திட்டத்தின் கீழ்க் காணாமல்போன 76 குழந்தைகளைக் கண்டறிந்த தலைமைக் காவலர் சீமா தாகாவுக்கு (Seema Dhaka) ஏ.எஸ்.ஐ-ஆகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. 12 மாதங்களுக்குள் 50 குழந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டியது இலக்காக இருந்த நிலையில், சீமா மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர்களில், 50 குழந்தைகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள். இந்தக் குழந்தைகளைக் கண்டறிவதற்காக இவர் பல்வேறு மாநிலங்களுக்குத் தொடர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். புதிய ஊக்கத் திட்டத்தின்கீழ் டெல்லியில் முதல் பதவி உயர்வு பெறுபவர் இவர்தான். இவரின் கணவரும் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.
source https://www.vikatan.com/news/crime/delhi-female-constable-rescues-76-children-in-3-months
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக