Ad

சனி, 27 ஜூன், 2020

Corona Live Updates: அமெரிக்காவில் 25%; பிரேசிலில் 12.8%! - ஒரு கோடியைத் தாண்டிய மொத்த பாதிப்பு

ஒரு கோடியைத் தாண்டிய மொத்த பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 54,53,247 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,626ஆக உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 25,96,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,28,152 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 46, 860 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 12,80,000-த்தைத் தொட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் 25 சதவிகிதத் தொற்று அமெரிக்காவிலும் 12.85 சதவிகிதத் தொற்று பிரேசிலிலும் பதிவாகி இருக்கிறது.

கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953-லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685-லிருந்து 16,095 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆகவும் உயர்ந்துள்ளது. உலக பாதிப்பில் இந்தியாவின் பங்கு 5.30 சதவிகிதமாகும்.



source https://www.vikatan.com/news/general-news/28-06-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக