Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

கொரோனா: 3 நாள்களில் 120 பேர்; புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள்! -அச்சத்தில் கோவை

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிக்கும் பாதிப்பு காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

கொரோனா

Also Read: டாக்டர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா! -சீல் வைக்கப்பட்ட கோவை மருத்துவமனை

முக்கியமாக, பாதிப்பு குறைவாக இருந்த கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் 120 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பீளமேடு, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சேரன்மாநகர், கெம்பட்டி காலனி, துடியலூர், பன்னிமடை, ஒலம்பஸ், நேருநகர், ஆடிஸ் வீதி, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம்,

கோவை

போத்தனூர், கோவை அரசு மருத்துவமனை என்று கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாகி வருகிறது. பீளமேடு பெரியார் காலனியில் மட்டும் நேற்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் பி.ஆர் கணேஷ் அண்ட் ஷா என்ற பெயரில் துணிக்கடை செயல்பட்டு வந்தது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல், ஊரடங்கு உத்தரவை மீறி இரவு 11 மணிவரை அந்தக் கடை வியாபாரம் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தக் கடைக்கு அதிகாரிகள் கடந்த வாரம் சீல் வைத்தனர். ``சீல் வைத்த அடுத்த நாளே, அந்தக்கடை மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது. மேலும், அந்தக்கடையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கோவை

அவர்கள் மூலம்தான், மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி, இந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்பே அந்தக் கடை மீது அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது” என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட பேரூரைச் சேர்ந்த 90 வயது முதியவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் ``அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை” என்கின்றனர். அதேநேரத்தில், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவலிலும், சென்னையிலிருந்து சுகாதாரத்துறை கொடுக்கும் தகவலுக்கும் வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கோவை

நேற்று 46 பேர் பாதிக்கப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். சென்னையிலிருந்து கொடுத்த தகவலின்படி கோவையில் 32 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, கோவையில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை தகவலில், கோவையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரிசோதனை

மாநகரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று மட்டும் 1,268 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-120-corona-positive-cases-in-3-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக