Ad

சனி, 27 ஜூன், 2020

`12,524 கிராமங்கள்; 1,950 கோடி!’ -பாரத்நெட் டெண்டரை ரத்து செய்த மத்திய அரசு

பாரத்நெட் திட்டம் என்பது கிராமப்புறங்களில் அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளைத் தரும் மத்திய அரசின் திட்டமாகும். 12,524 கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்க ரூபாய் 1,950 கோடி செலவில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஊராட்சிப் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிகளை ஏற்படுத்த இந்த பாரத்நெட் திட்டங்கள் உதவும் என அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து கூறிவந்தனர். 2019-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான டெண்டர்களும் விடப்பட்டன. இந்த டெண்டர்களில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர்.

தமிழக அரசு இந்தத் திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து அளித்து வந்தது. இந்தநிலையில் தற்போது மத்திய வர்த்தக அமைச்சகம், டெண்டர் விதிகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றுகூறி பாரத்நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து அறிவித்துள்ளது. கருவிகள் கொள்முதல் தொடர்பான டெண்டரில் உள்ள குறைகளைச் சரிசெய்து மீண்டும் டெண்டர்விட மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத்நெட் ஒப்பந்தம்

Also Read: தமிழக கிராமங்களுக்கு வருகிறது பாரத்நெட்! முதல்வர் பழனிசாமி அசத்தல் ஒப்பந்தம்

பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதைச் செயல்படுத்த `தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்' என்ற நிறுவனமும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நிறுவன விதி 2013-ன்படி 2018-ம் ஆண்டு TANFINET என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்களிலிருந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர். குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கங்களை ஏற்காத மத்திய அரசு தற்போது அந்த டெண்டரை ரத்து செய்துள்ளது.

Also Read: தமிழக கிராமங்களுக்கு வருகிறது பாரத்நெட்! முதல்வர் பழனிசாமி அசத்தல் ஒப்பந்தம்



source https://www.vikatan.com/news/india/central-govt-cancel-the-tender-for-bharat-net-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக