Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

சொத்துக்காகக் கொல்லப்பட்ட முதல் மனைவி! -கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கத்தலூரைச் சேர்ந்த கருப்பையா (62). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள்(55) என்பவரை முதல் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சில வருடங்களுக்குப் பிறகு நல்லம்மாளின் சகோதரி ஜெயாவை, கருப்பையா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

கருப்பையா, தனது இரண்டாவது மனைவியான ஜெயாவுக்குத் தனது சொத்துகள் சிலவற்றைக் கொடுக்கத் தீர்மானித்தாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் மனைவி நல்லாம்மாள், தனக்கும் சொத்து வேண்டும் என்றுகூறி பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், விராலிமலையில், 100 நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நல்லம்மாளைக் கருப்பையா அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

கருப்பையா

2016-ம் ஆண்டு நடந்த இந்தக் கொலைச் சம்பவம் விராலிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விராலிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவைக் கைது செய்தனர்.

இந்த வழக்கானது கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பரபரப்பு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு என்பதால், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சத்யா, சொத்திற்காக முதல் மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள்தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, கருப்பையா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: கொரோனா அச்சம்; மன உளைச்சல்! -தற்கொலை முடிவை நாடிய `இருட்டுக்கடை' அல்வா உரிமையாளர்



source https://www.vikatan.com/news/judiciary/pudukkottai-mahila-court-convicts-life-imprisonment-to-husband-for-killing-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக