Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

Corona Live Updates: `ஒரே நாளில் 19,459 பேருக்கு தொற்று’ - இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,859 -லிருந்து 5,48,318 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095 -லிருந்து 16,475 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,10,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா - கொரோனா வைரஸ்

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,429 ஆகவும் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

தளர்வா... நீட்டிப்பா...?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளநிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கொரோனா- உலக அப்டேட்ஸ்!

கொரோனா - உலகம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டிய நிலையில் இன்று 1,02,38,232ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -ஆக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு! 

கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,37,072 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,437ஆக அதிகரித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/2962020-29-06-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக