Ad

வியாழன், 25 ஜூன், 2020

Corona Live Updates: 24 மணிநேரத்தில் 17,296 பாசிட்டிவ்! -இந்தியாவில் 4.90 லட்சம் பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் 4.90 லட்சம் பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,99,575 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 52,53,089 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935ஆக உயர்ந்துள்ளது.

Also Read: கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவுக்கு எப்போது கிடைக்கவரும்? #Covid19FAQ



source https://www.vikatan.com/news/general-news/26-06-2020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக