பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
புன்னகை:
உலகின் அனைத்து மொழிகளையும் சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துவிடும் கருவி.
தேடல்:
வருங்காலத்தில் இன்னும் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படும்;
எப்படி வாழ்வது என்பதைத் தவிர.
வெற்றி:
ஒரு புதிய இடத்தில் தன்னை அறிமுகப்படுத்தத் தேவையில்லாத போது ஒருவனுக்குக் கிடைக்கும் மனநிறைவு.
நாளை:
வாழ்க்கை மனிதனுக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு.
அன்பு:
கொதிப்பவர்களிடம் ஆவியாகவும்,
குளிர்ந்தவர்களிடம் உறைந்தும் போகும் திரவம்.
வெறுப்பு:
இதயத்தின் சுருக்கங்களைப் பலரும் உணர்ந்து கொள்வது தோலில் சுருக்கம் விழும்போதுதான்.
நினைவுகள்:
ஓடும் இரயிலில் மரங்கள் பின்னோக்கி ஒடுவதாய் மனிதர்கள் நம்பி விடுகின்றனர்.
அந்நியோன்யம்:
அப்பாவிற்கு இளவரசியாய் இருக்கும் பெண்கள் அனைவருமே கணவனுக்கு ராணியாக மாறுவதில்லை.
ஆசை:
சாமான்களைக் குறைவாக எடுத்துச் செல்லும் மனிதர்களுக்கு பயணம் சுகமான ஒன்றாகவே அமைகிறது.
பொய்:
மறந்து போனதுபோல நடிப்பதற்கு மனிதனுக்கு நிறைய ஞாபகசக்தி தேவை.
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/ten-second-nano-stories
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக