Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

2020 ஹோண்டா லிவோ BS-6... என்ன எதிர்பார்க்கலாம்?

ஹீரோவுக்கு பேஷன் ப்ரோ எப்படியோ, ஹோண்டாவுக்கு லிவோ அப்படி. அதாவது அந்தந்த நிறுவனங்களின் 110 சிசி ப்ரீமியம் கம்ப்யூட்டர் பைக்குகள் அவைதான்! முறையே 66,000 ரூபாய் (டிரம் பிரேக்) மற்றும் 68,200 ரூபாய்க்கு (டிஸ்க் பிரேக்), முற்றிலும் புதிய பேஷன் ப்ரோ பைக்கை (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்), கொரோனாவுக்கு முன்பாகவே ஹீரோ நிறுவனம் களமிறக்கிவிட்டது (பிப்ரவரி 2020). இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹோண்டாவின் என்ட்ரி லெவல் கம்யூட்டரான CD 110 பைக்கின் BS-6 வெர்ஷன் அறிமுகமான நிலையில், தற்போது ப்ரீமியம் 110 சிசி பைக்கான லிவோவின் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. CD 110 பைக்கின் BS-4 மாடலைவிட, BS-6 வெர்ஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை 12,000 ரூபாய் அதிகமாகி இருந்தது தெரிந்ததே. ஏறக்குறைய அதேபோன்ற விலை உயர்வை இங்கும் எதிர்பார்க்கலாம்.

Livo BS-6

டீசர்களைப் பார்க்கும்போது, லிவோவின் தோற்றத்தில் சின்னச்சின்ன மாற்றங்கள் இருக்கும் எனத் தோன்றுகிறது. முன்பக்கக் கவுலில் இருக்கும் ஹெட்லைட்டின் வடிவமைப்பு முன்புபோலவே இருந்தாலும், இது CD 110 போலவே DC செட்-அப்பிற்கு அப்கிரேடு ஆகியிருக்கலாம். ஹாலோஜன் ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும் வைஸர் புதிதாகக் காட்சியளிக்கிறது. மற்றபடி பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள், க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்கள், கறுப்பு நிறத்தில் இருக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் & 5 ஸ்போக் அலாய் வீல்கள், முன்பக்க டிஸ்க் பிரேக் & 18 இன்ச் MRF டியூப்லெஸ் டயர்கள் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. பக்கவாட்டுப் பகுதியில் பெட்ரோல் டேங்க்கை உற்றுநோக்கும்போது, அது முந்தைய மாடலில் இருந்ததுபோன்ற டூயல் டோன் க்ராஃபிக்ஸ் உடனேயே வரும் எனச் சொல்லலாம். ACG சைலன்ட் ஸ்டார்ட், ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியும் உண்டு.

லிவோ BS-4

CD 110 BS-6 பைக்கில் இடம்பெற்றிருந்த புதிய 109.51சிசி HET eSP இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியே, BS-6 லிவோவிலும் இருக்கும். எனவே 8.68bhp பவர் - 0.93kgm டார்க்கில் எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த பைக்கின் பாக்ஸ்-செக்‌ஷன் ஸ்விங் ஆர்மைப் பார்த்தால், அநேகமாக Open Chain பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. மேலும், லேட்டஸ்ட் ஹோண்டா பைக்குகளில் இருக்கும் அதே ஸ்விட்ச்கள் இங்கும் இடம்பெற்றுள்ளன.

Livo BS-6 Tail Light

எனவே, Integrated Pass லைட் தவிர, ஸ்டார்ட்டர் பட்டன் உடனான இன்ஜின் கில் ஸ்விட்ச் சேர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். இதைத் தவிர சிங்கிள் பீஸ் சீட் & கிராப் ரெயில், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், டேங்க் Extension உடனான பெட்ரோல் டேங்க் எனப் பல ஒற்றுமைகளைப் பார்க்கமுடிகிறது. பாடி பேனல்களைத் தவிர, பின்பக்க டெயில் லைட்டின் வடிவமும் மாறியிருக்கிறது.

Livo BS-6 Meter

ஹெட்லைட்டுக்கு மேலே அதே அனலாக் - டிஜிட்டல் பாணியிலான மீட்டர்தான் என்றாலும், அதன் டயல் முற்றிலும் புதிது. இதில் வழக்கமான ட்ரிப் மீட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், கடிகாரம் தவிர, புதிதாக இன்ஜின் வார்னிங் இண்டிகேட்டர் சேர்ந்திருக்கிறது. என்னதான் தொழில்நுட்பத்தில் இந்த ப்ரீமியம் கம்யூட்டர் பைக் முன்னிலை வகித்தாலும், போட்டி பைக்குகளில் (பஜாஜ் டிஸ்கவர் 110 BS-6 இனிமேல் வரும்) இருக்கக்கூடிய LED ஹெட்லைட்/LED DRL, Low பேட்டரி இண்டிகேட்டர், மொபைல் சார்ஜர், எக்கோ மோடு இண்டிகேட்டர், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் போன்ற வசதிகள் இங்கே காணவில்லை என்பது மைனஸ். உத்தேசமாக 64,000 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் எனும் ஆரம்ப விலையில் வரப்போகும் லிவோ BS-6, ஓட்டுதல் அனுபவத்தில் என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகவே இருக்கிறோம்.



source https://www.vikatan.com/automobile/motor/honda-2020-bs-6-livo-what-can-we-expect

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக