Ad

வியாழன், 25 ஜூன், 2020

சிறந்த நீர் மேலாண்மைக்கான `ஸ்கோச் கோல்டு’ விருது! அசத்திய தேனி மாவட்டம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை மற்றும் மேம்பாட்டிற்காக விருது கொடுக்கப்படுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருதானது, சிறந்த முன்மாதிரிக்கான `தங்க விருது’ மற்றும் ’ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது எனக் கொடுக்கப்படுவது வழக்கம்.

Also Read: துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!

Theni Collector Pallavi Baldev

இதில், 2020ம் வருடத்திற்கான நீர் மேலாண்மை திட்டங்களைச் சிறப்பாகச் செய்ததற்காகச் சிறந்த முன்மாதிரிக்கான தங்க விருதை (ஸ்கோச் கோல்டு - SKOCH GOLD AWARD - 2020) தேனி மாவட்ட நிர்வாகம் தட்டிச் சென்றுள்ளது.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய கலெக்டர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், ``தேனி மாவட்டத்தில் உள்ள 229 நீர்நிலைகளை குடிமராமத்துப் பணியிலும், 100 நீர்நிலைகளை தனியார் பங்களிப்பிலும் தூர்வாரியுள்ளது மாவட்ட நிர்வாகம். மழைப்பொழிவை அதிகரிக்கும் மியோவாக்கி காடுகளை அமைத்தல், நகர, பேரூராட்சிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் தடுத்து அதனை சுத்திகரித்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளது.

Also Read: நீர் பாதுகாப்பில் அசத்தல் சாதனை! - தேசிய அளவிலான `ஸ்கோச் விருது' பெற்ற திருவண்ணாமலை

இந்திய அளவில் 130 மாவட்டங்கள் இவ்விருதிற்கான பரிந்துரையில் இருந்தன. டெல்லியில் நடந்த விருது தேர்விற்கான நிகழ்வில், தேனி மாவட்ட சப்-கலெக்டர் சினேகா கலந்துகொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைச் செயல்பாடுகளை விளக்கினார். தொடர்ந்து ஆன்லைன் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தேனி மாவட்டம் அதிக ஓட்டுகள் பெற்று விருது கிடைத்துள்ளது” என்றார்.

மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் கூறும் போது, ``சிறந்த நீர் மேலாண்மைக்கான ஸ்கோச் கோல்டு விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/theni-district-wins-skoch-gold-award-for-best-water-management

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக