Ad

வியாழன், 25 ஜூன், 2020

Corona: `சீன முகாமைவிட 10 மடங்கு பெரியது!' - 10,000 படுக்கைகள் கொண்ட டெல்லி மருத்துவமனை

நாட்டில் தற்போது அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை முந்தி டெல்லி இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. ஜூலை 6ஆம் தேதிக்குள் டெல்லியில் இருக்கும் அனைத்து வீடுகளையும் பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் 30 ஆம் தேதிக்குள் 15,000 கொரோனா படுக்கைகளுக்கான தேவை ஏற்படலாம் என்று டெல்லி அரசு எதிர்பார்க்கிறது.

டெல்லி கொரோனா முகாம்

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லியின் சத்தர்பூரில் உள்ள ராதா சொவாமி ஆன்மிக மையத்தில் 10,000 படுக்கைகளைக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 சதவிகிதப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசுழற்சி செய்யப்படும் (கார்ட்போர்ட்) அட்டைகளிலிருந்து படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சீனாவில் லெய்ஷென்ஷான் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட 1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வசதியை விட டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி பத்து மடங்கு பெரிதாகும்.

டெல்லி கொரோனா முகாம்

Also Read: கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?

ராதா சொவாமி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொரோனா நோயாளிகளுக்கான வசதியைச் செயல்படுத்த இந்திய- திபெத் எல்லைக் காவல்படை பொறுப்பேற்றுள்ளது.

மேலும், 18,000 டன் அளவு குளிர்சாதன வசதியைக் கொண்டிருக்கும் இவ்வசதியில் உணவும் வழங்கப்படும். 29 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள வசதியோடு 50 ஏக்கர் பரப்பளவில் குளியலறை, கழிப்பறை மற்றும் வாகன நிறுத்த வசதிகளும் வழங்கப்படும் என்று மையத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/delhis-largest-covid-care-center-at-radha-soami-satsang-beas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக