Ad

வியாழன், 25 ஜூன், 2020

`கொரோனா காலத்தில் கொண்டாட்டம் தேவையா?' -கோவை ஸ்மார்ட் சிட்டி சர்ச்சை

கொரோனா ஆய்வுப் பணி, பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செய்யப்பட்டுள்ள பணிகளை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தல் ஆகியவற்றுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்திருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Also Read: கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்ட அவர்,``கொரோனா தடுப்புப் பணியில் கோவை முன்மாதிரியாக இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது” என்று கூறிவிட்டு, தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சாடினார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், பொதுமக்களிடம் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வு செய்தார். பேருந்துக்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூன்று பேர் தனிமனித இடைவெளியுடன் மக்களிடம் பேசினர்.

காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

ஆனால், பேருந்துக்கு வெளியே முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸார், ஊடகங்கள், பொதுமக்கள் எனக் கூட்டம் முண்டியடித்தது. முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதிகளில் ரூ.39 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள `ஐ லவ் கோவை' செல்ஃபி கார்னர், தண்ணீர் ஏ.டி.எம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைக்க, அது மக்கள் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது.

கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள்
கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள்
கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள்

இதற்காக, ஏராளமான பணியாளர்கள் கடந்த சில நாள்களாகவே அவசர அவசரமாகப் பணிகளைச் செய்து வருகின்றனர். நேற்று காலைகூட ஊழியர்கள் மிகவும் அவசர அவசரமாகப் பணிகளைச் செய்ததைக் காண முடிந்தது. மாலை அந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

Also Read: கோவை: 3 நாள்களில் 21 பேருக்கு கொரோனா.. ஹாட்ஸ்பாட்டாகும் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர்?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் பூங்காக்கள் உட்பட பொழுதுபோக்கு அம்சங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டப் பணிகள் முழுவதுமாக முடிவதற்குள்ளேயே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மாலை வண்ண வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், காற்றில் பறந்த பலூன்கள் என்று அந்த இடமே திருவிழாக் கோலமானது.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி

பொதுமக்களும் தனிமனித இடைவெளியின்றி அங்கு வலம் வந்தனர். `கொரோனா காலகட்டத்தில் அரசே, இப்படி கொண்டாட்டங்களை அனுமதிக்கலாமா?' என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ``விலகியிரு.. வீட்டிலிரு.. தனிமனித இடைவெளி முக்கியம் என்று இதே தமிழக அரசு சொல்கிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, பாதிப்பு எண்ணிக்கை குறைவே தவிர, கோவையில் முழுவதுமாகப் பாதிப்பு குறைந்துவிடவில்லை. நேற்றுகூட கோவையில் 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ஸ்மார்ட் சிட்டி
கோவை ஸ்மார்ட் சிட்டி

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் இவ்வளவு அவசர அவசரமாகத் திறந்து, எதற்காகக் கொண்டாட்டங்களுடன் மக்களை அனுமதிக்க வேண்டும். அரசு சொல்லும் உத்தரவுகளை, அதே அரசு இயந்திரங்களே மீறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை” என்கின்றனர் வேதனையுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/coimbatore-smart-city-celebration-creates-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக