எனக்கு கடந்த வருடம் கொரோனா வந்து குணமானேன். இப்போது 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். எனக்கு ஆன்டிபாடி இருக்கிறதா, எவ்வளவு இருக்கிறது என எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன டெஸ்ட், எப்போது எடுக்க வேண்டும்?
- ரங்கராஜன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``நீங்கள் கேட்பது போல ஆன்டிபாடி டெஸ்ட்டெல்லாம் அவசியமில்லாதது. எப்படிப்பட்ட ஆன்டிபாடி டெஸ்ட்டிலும் நம் உடலில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பாற்றலின் அளவு தெரிய வாய்ப்பில்லை. ஆன்டிபாடி டெஸ்ட் என்பது சாமானியருக்குத் தேவையற்றது.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலைத் தெரிந்துகொள்ளச் செய்யப்படுவது அது. குறிப்பிட்ட சில தருணங்களில் குறிப்பிட்ட நோயாளியின் மருத்துவ நிலையில் சந்தேகங்கள் எழும்போது மருத்துவர்கள் இந்தச் சோதனையைப் பரிந்துரைப்பார்கள்.
Also Read: Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?
அது மருத்துவமனைகளிலோ, பிரத்யேக பரிசோதனைக் கூடங்களிலோ மருத்துவ நிபுணர்களால் செய்யப்பட வேண்டியது. இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் இப்போதைக்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பலாம். கூடவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றுங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-have-fully-vaccinated-after-recovered-from-covid-do-i-need-to-test-antibody-level
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக