Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நெல்லை: காவல் நிலையம் வந்த காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்! - மூவரை கைது செய்த போலீஸ்

நெல்லை டவுன் கோடிஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். பொறியியல் பட்டதாரியான அவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரும் நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

காதல் திருமணம்

ஆனந்தராஜூம் ரம்யாவும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள், காதலர்களைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, நெல்லை ராமையன்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட இருவரையும் பெண்ணின் வீட்டார் தேடி வந்தனர். அதனால் பெற்றோரால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என ஆனந்தராஜ் , ரம்யா தம்பதியினர் அச்சம் அடைந்தனர். அதனால் இருவரும் நெல்லை பேட்டையில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று தங்களுக்கு பாதுகாப்பு கோரினார்கள்.

திருமணம்

காதல் திருமணம் செய்த தங்களை பெற்றோர் தேடி வருவதால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக பேட்டை காவல் ஆய்வாளர் இரு குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரம்யாவை தங்களுடன் வருமாறு பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தினார்கள். ஆனால், ரம்யா அவர்களுடன் செல்ல மறுத்ததுடன் கணவருடன் செல்வதாக போலீஸாரிடம் தெரிவித்தார். அதனால் ரம்யாவின் பெற்றோர் ஆத்திரத்துடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்களுடன் மீண்டும் வருமாறு வலியுறுத்தினார்கள்.

காதலர்கள் தஞ்சம் அடைந்த பேட்டை காவல் நிலையம்

ரம்யா தங்களுடன் வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவரின் சகோதரர் ராம்குமார் என்பவர் காவல் நிலையத்தின் உள்ளே வைத்து கத்தியால் ரம்யாவை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீண்டும் ராம்குமார் குத்த முயன்றார். அதைத் தடுத்த கணவர் ஆனந்தராஜூக்கும் கத்திக் குத்து விழுந்தது.

Also Read: `12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ - அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்

கத்திக் குத்தால் காயமடைந்த இருவரையும் பேட்டையில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலர்களை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய ராம்குமார் மற்றும் அவருடன் வந்த மூவரையும் போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரம்யாவின் தந்தை கல்யாணசுந்தரம், சகோதரர் ராம்குமார், ராம்குமாரின் நண்பர் விமல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கத்தி குத்து

பாதுகாப்பு கோரி காவல் நிலையத்துக்கு வந்தவர்கள் மீது போலீஸார் முன்னிலையிலேயே கத்திக் குத்து விழுந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை எந்ற்படுத்தியுள்ளது.

Also Read: வேலூர்: கொலை வழக்கில் தொடர்பு! -குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் சிறையிலடைப்பு



source https://www.vikatan.com/news/crime/coupe-came-to-police-station-for-security-were-stabbed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக