Ad

வியாழன், 23 செப்டம்பர், 2021

பாலியல் அத்துமீறல்: `2,000 பெண்களின் ஆடைகளைத் துவைக்க வேண்டும்' - அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றவருக்கு கோர்ட் கொடுத்திருக்கும் தண்டனை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள லுகாஹா என்ற இடத்தில் வசிப்பவர் லாலன் குமார். இவர் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து மறுநாள் காலை அந்தப் பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து லாலன் குமாரைக் கைதுசெய்தனர். லாலன் குமார் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜான்ஜன்பூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

சித்திரிப்புப் படம்

Also Read: போக்சோ வழக்கு: விடுவிக்கப்பட்ட குற்றவாளி; 7 ஆண்டுக்குப் பின் தண்டனை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்த மனு நீதிபதி அவினாஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் கொடுக்க நீதிபதி புதிய நிபந்தனை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். ஜாமீனில் வெளியில் சென்றதும் லாலன் குமார் வசிக்கும் கிராமத்திலுள்ள 2,000 பெண்களின் ஆடைகளை இலவசமாகத் துவைத்துக் கொடுக்க வேண்டும். இந்தப் பணியை 6 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும். லாலன் குமார் பெண்களின் துணியைத் துவைப்பதை உறுதி செய்யும்படி கிராமத் தலைவர் நஜிமாவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. லாலன் சிறையில் மிகவும் ஒழுக்கமாக இருந்ததோடு, நடந்த சம்பவத்துக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இது குறித்து நஜிமா கூறுகையில், ``கோர்ட் தீர்ப்பு மிகவும் சிறந்தது. இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதோடு, பெண்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும். துணியைத் துவைப்பதற்கு தேவையான சோப்பு, சலவைத்தூள் போன்றவற்றை வாங்கும் பொறுப்பு லாலனைச் சேர்ந்தது. லாலன் செய்யும் பணியை தினமும் கவனிப்பேன். எங்கள் கிராமத்தில் 225 பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பெண்கள் சுழற்சிமுறையில் தங்களது ஆடைகளை லாலனிடம் துவைக்கக் கொடுப்பார்கள். ஆறு மாதப் பணி முடிந்த பிறகு லாலன் பணி குறித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வேன்" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/judiciary/bihar-courts-condition-to-rape-accused-to-get-bail

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக