தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் கே.டி ராகவன். அவரின் பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது.
இந்த நிலையில் கே.டி ராகவன் தனது முகநூல் பதிவில், ``தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்... என்னை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்... நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்.. இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்...
என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது ...இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்... நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்..குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்...சட்ட படி சந்திப்பேன் ..தர்மம் வெல்லும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/kt-ragavan-resign-from-his-party-post-after-video-went-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக