Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

7.5% இட ஒதுக்கீடு: `ஆளுநர் தாமதத்தால் அரசாணை!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan

ஆளுநர் தாமதத்தால் அரசாணை!

7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதித்து வருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன்னில் குருபூஜையை ஒட்டி, தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதித்து வருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடை இந்த ஆண்டே வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/30-10-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக