Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2020

காதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்களது 15 வயது மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரும், அந்தச் சிறுமியும் காதலித்தது தெரியவந்தது.

சேரன்மாநகர் வீடு

Also Read: `எங்க ஓனர் சம்பளமாக கொடுத்தார்!'- ஊழியரால் கள்ளநோட்டு அச்சடித்த காங்கிரஸ் பிரமுகர் சிக்கினார்

இதற்கிடையே, காதலர்கள் வீட்டைவிட்டு வெளியேறி, கோவை சேரன்மாநகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்கள். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார், கோவை பீளமேடு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தையுடன் பீளமேடு போலீஸாரும், புதுக்கோட்டை போலீஸாரும் சேரன்மாநகரிலுள்ள அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். போலீஸார் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து வீட்டை போலீஸார் சோதனையிட்டனர்.

அப்போது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் நான்கு கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் அதை எண்ணிப் பார்த்தபோது 7.34 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

பணத்தைக் கைப்பற்றிய போலீஸார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்து விசாரித்தனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Also Read: `புது' மெஷினில் கள்ள நோட்டு... தியேட்டரில் செலவு... - நாகர்கோவிலில் பிடிபட்ட கும்பல்!

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது,``நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் தீப்சித், புதுக்கோட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் ராகவேந்திரன் இருவரும் சேரன்மாநகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். ராகவேந்திரனும் ரஞ்சித்தும் நண்பர்கள். இதையடுத்து, ரஞ்சித்துக்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கு சென்றபோது வீடு பூட்டியிருந்தது.

கைது

ஹவுஸ் ஓனர் உதவியுடன் வீட்டைத் திறந்து பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. தீபாவளிப் பண்டிகை சீஸனையொட்டி அவர்கள் 2,000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்து பரப்ப திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் கள்ளநோட்டு அடிக்கப் பயன்படுத்திய ஸ்கேனர், பிரின்ட்டரைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-police-seized-7-lakh-rupees-fake-currency-arrested-two

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக