Ad

சனி, 31 அக்டோபர், 2020

மனு விவாதங்கள்: `கூக்குரல் எழுப்புவோர் முதலில் அரசமைப்புச் சட்டத்தைப் படிக்கவேண்டும்... ஏன்?'

இன்று தமிழகம் முழுவதும் மனு சாஸ்திரம் பற்றிய விவாதங்கள் சூடுபறக்கின்றன.

`மனு' என்று உண்மையிலேயே ஒருவர் இருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் எழுதியதாகக் கூறப்படும் தர்ம நூலுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. தவிர அறிஞர்கள் பலரும், 'மனு சாஸ்திரம் என்ற பெயரில் பல இடைச்செருகல்கள் உள்ளன; மனு சாஸ்திரம் என்பது சில அறங்களின் கோட்பாடு என்பதைத் தவிர அதற்கு எவ்விதப் புனிதமும் கற்பிக்கத் தேவையில்லை' என்கிறார்கள்.

`இந்துப் பெண்களை திருமாவளவன் அவமதித்துவிட்டார்' என்று கூக்குரல் எழுப்பும் சிலர், முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் படிக்க வேண்டும்.

என்றைக்கு அந்தச் சட்டம் உருவானதோ, அன்றிலிருந்து நம்மை வழிநடத்திச் செல்வது அரசமைப்புச் சட்டம் ஒன்றுதானே ஒழிய வேறு எந்த சாஸ்திரங்களோ புனித நூல்களோ அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மதங்கள் எவையாக இருப்பினும், அவை பெண்களை ஒரு ஜடப்பொருளாகத்தான் நடத்தி வந்திருக்கின்றன. 'சூத்திரர்களையும், பெண்களையும், விலங்கினங்களையும் தொடர்ந்து மத்தளத்தை அடிப்பதுபோல் அடித்துவைத்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லும் மனு சாஸ்திரத்தை, இன்று கலகக்குரல் எழுப்புபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

'சமயம் என்ற பெயரில் ருதுவான பெண்களை சபரிமலை வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியாது' என்ற நடைமுறையை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'பெண்களை வழிபாட்டுத்தலத்திலிருந்து ஒதுக்கிவைப்பது தீண்டாமைக்கு ஒப்பானதே' என்று குறிப்பிட்டுள்ளது.

பிறன் மனை விழைதலைத் தடுக்கும்விதமாக இயற்றப்பட்ட 1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497-ஐ, 2018-ம் ஆண்டு ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், 'பெண்களை ஜடப்பொருளாகவும், சொத்துகளாகவும் நடத்த முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி ஒரு பெண்ணின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறது...

- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவின் இந்த லாஜிக் பார்வையை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3effZpJ > அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா? https://bit.ly/3effZpJ

தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?

அரசியல் மேடையிலிருந்து இறங்கி, இலக்கிய மேடையேறிய நாஞ்சில் சம்பத், மறுபடியும் தி.மு.க ஆதரவாளராக முழங்க ஆரம்பித்திருக்கிறார். அவரிடம் இன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம்!

"நீங்கள் சொல்வதுபோல் 'வகுப்புவாத சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுக்கிற' தி.மு.க-வே சமீபகாலமாக இந்து மத ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறதே..?''

"தி.மு.க., மக்களைச் சார்ந்து இருக்கக்கூடிய வெகுஜன இயக்கம். 'நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்' என்று சொன்ன அறிஞர் அண்ணா, பிறகு ஓரடி இறங்கிவந்து 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற நிலைப்பாட்டுடன்தான் மக்களைச் சந்தித்தார். அந்தவகையில் மக்களின் கடவுள் நம்பிக்கையில், வழிபாட்டு அணுகுமுறையில் எந்தவித அத்துமீறலையும் செய்வதற்கு தி.மு.க விரும்பவில்லை."

நாஞ்சில் சம்பத்

"ஆனால், தி.மு.க கூட்டணியிலுள்ள திருமாவளவன், 'மனுஸ்மிருதி' குறித்துப் பேசிய பேச்சு, சர்ச்சையாக்கப்பட்டிருப்பது கூட்டணிக்குப் பாதகம்தானே..?''

"அப்படியில்லை... 1971 சட்டமன்றத் தேர்தலின்போது, 'ராமர் சிலையை செருப்பால் அடித்தார்கள்' என்று கூறி, தி.மு.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால், அந்தத் தேர்தலில்தான் தி.மு.க 184 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே, மக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். 'நமது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தருபவர்கள் யார், உரிமைகளை மீட்டெடுப்பவர்கள் யார்?' என்பதில் மட்டும்தான் மக்களின் கவனம் இருக்கும்.''

> "திருமாவளவன், 'மனுஸ்மிருதி'யைப் பற்றி தற்போதும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?''

> "இந்த விஷயத்தில், திருமாவளவன் மீதான வழக்கைக் கண்டித்துக் குரல் கொடுக்கிற தி.மு.க., மனு ஸ்மிருதிக்கு எதிராக பெரியதாகவோ, நேரடியாகவோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லையே... ஒருவேளை இந்துக்களின் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயமா?''

> "இந்து சமயத்தின் மீதான ஆதரவு நிலைப்பாடு மட்டுமல்ல... சமீபத்தில் '800' திரைப்பட சர்ச்சையின்போதும் ஈழம் விவகாரம் தொடர்பாக எந்தவிதக் கருத்தும் சொல்லாமல் தி.மு.க ஒதுங்கிக்கொண்டதே..?"

> "ஆனால், 'ஈழம் விவகாரத்தில், தி.மு.க அரசு துரோகம் செய்துவிட்டது' என்று கடந்த காலங்களில் நீங்களே பேசியிருக்கிறீர்களே..?''

- இத்துடன் மேலும் சில கேள்விகளுக்கும் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பதில்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3mFA0bQ > "மனுஸ்மிருதியை எதிர்ப்பது தி.மு.க-வின் வேலையல்ல!" - நாஞ்சில் சம்பத் விளக்கம் https://bit.ly/3mFA0bQ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/general-news/justice-chandru-writes-about-manusmriti-issue-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக