Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

சென்னை: மாணவி கொடுத்த புகார் - போக்ஸோ சட்டத்தில் பேராசிரியர் கைது!

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (26). இவர் எம்.பி.ஏ, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு 17 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார். அந்த மாணவிக்கும் லோகேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை

மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகப் பேராசிரியர் லோகேஷ் கூறி ஏமாற்றிவிட்டதாக மாணவியின் தரப்பில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குபதிவு செய்து லோகேஷிடம் விசாரணை நடத்தினார். விசாரணயில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``பேராசிரியர் லோகேஷுக்கு வேறு ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு நடந்துவருகிறது. இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் செய்ய தேதி குறிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான போட்டோவை லோகேஷ் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். பிறகு, லோகேஷிடம் மாணவி போனில் பேசியபோது, அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகே லோகேஷ் குறித்த விவரத்தை வீட்டில் மாணவி கூறியுள்ளார். அதன்பேரில் லோகேஷ் மீது காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

Also Read: கர்ப்பமான 17 வயதுச் சிறுமிக்கு திருமணம்? - போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான டிரைவர்

கைது

விசாரணைக்குப்பிறகு லோகேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். புகாரளித்த மாணவிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-college-professor-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக