Ad

வியாழன், 29 அக்டோபர், 2020

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்... 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

இன்று காலை சென்னை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு ‘மஞ்சள் அலர்ட்’ கொடுத்துள்ளது. ‘அடுத்த இரண்டு நாள்களுக்கு இந்த எச்சரிக்கை தொடரும். அடுத்தடுத்த நாள்களில் சற்று மழை குறையும். நவம்பர் 3-ம் தேதிக்கு பிறகு, மீண்டும் தமிழகத்தில் கன மழை தொடங்கும்.’ என்று இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘சென்னையில் அடுத்த இன்று காலை கன மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு ஆரம்பித்த மழை தற்போது வரை விடாமல் பொழிந்துகொண்டிருக்கிறது. சென்னையின் தாழ்வான பகுதிகளிலெல்லாம் மழை நீழ்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில், பாலவாக்கத்தில் 14 செ.மீ, பாடியில் 12 செ.மீ, ஜார்ஜ் டவுனில் 11 செ.மீ கொரட்டூர், நுங்கம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளது. மயிலாப்பூரில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பெய்துள்ளது.

சென்னை மழையில் செல்லும் வாகன ஓட்டிகள்

இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் கனமழை பெய்யும் என்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பிறப்பித்திருக்கிறது.

சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-2538 4530, 044 2538 4540 அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1913 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.



source https://www.vikatan.com/oddities/imd-issued-yellow-alert-for-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக