விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை எதிர்த்துப் போராட்டம் நடத்த சென்ற குஷ்பு உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் முட்டுக்காடு அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்தசூழலில், காளையார்கோயிலில் நடைபெறும் மருது சகோதரர்கள் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில்,``தமிழகத்தில் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியவர்களை கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்தச் சென்ற பா.ஜ.க நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
Also Read: `திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு
50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு இந்தாண்டு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கெனவே உயர்நீதிமன்றம் கூறி இருந்ததை, உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. கமிட்டியின் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு நிறைவேற்ற பா.ஜ.க சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசை குறைசொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கந்தசஷ்டி கவசத்தை கொச்சைபடுத்தியவர்களுக்கும், பெண்களை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசுவோர்களை பாதுகாக்கும் வகையில் தி.மு.க செயல்பட்டு வருகிறது. அவர்களது ஆதரவுபெற்ற நாடாளுளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அவர்களை பாதுகாத்தே வருகிறார் மு.க.ஸ்டாலின்’’ என்றார்.
அவரிடம், ரஜினியுடன் கூட்டணி உண்டா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு,``ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. ஆனாலும், கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியைப் பொறுத்துதான்’’ என்று முருகன் பதிலளித்தார்.
`பா.ஜ.க வன்முறையைத் தூண்டுகிறது என்று தி.மு.க குற்றம்சாட்டுகிறதே?’ என்ற கேள்விக்கு, ``தமிழகத் தாயமார்களை கொச்சைப்படுத்தியவர்களை, தமிழ் சகோதரிகளே நடமாட விடமாட்டார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம். நாங்கள் வன்முறையைத் தூண்டவில்லை" என்று அவர் பதிலளித்தார்.
source https://www.vikatan.com/news/politics/bjp-state-president-l-murugan-speaks-about-various-issues-in-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக