Ad

சனி, 31 அக்டோபர், 2020

நாமக்கல்: சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு; திடீர் தீ! - விபத்தில் இருவர் பலி

தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிக்கி, இருவர் உடல் கருகி பலியான சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

நாமக்கல் தீ விபத்து

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி தீபாவளி சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் பணியினை வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.

Also Read: இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்க்ரீட் தளம்! - நாமக்கல் அதிர்ச்சி

சிலர் பட்டாசு உள்ளிட்டப் பொருள்களை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யும் நிலையும் தொடர்கிறது. அப்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி, மாதேஸ்வரன் கோயில் பகுதியில், ஒரு வீட்டில் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கிக் குவித்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் திடீரென பட்டாசுகள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தீப்பற்றி வெடித்துச் சிதறியிருக்கிறது.

தீ விபத்தில் இறந்த இருவர்

தீ வீடு முழுவதும் பரவியிருக்கிறது. அப்போது, சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் வெடித்ததால், வீட்டுக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதனால், பதறிய அப்பகுதி மக்கள் எரியும் தீயை அணைக்க முயன்றனர். அந்த முயற்சி வீணானதால், குமாரபாளையம் தீயணைப்புத்துறை வீரர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து, ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையாகப் போராடி, தீயை அணைத்தனர்.

Also Read: விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம்! - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து

இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்த தங்கராஜ், ராஜகணபதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அதோடு, விபத்து நடைபெற்ற வீட்டின் அருகில் இருந்த சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு, பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரனை நடத்தினார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை

அவர், அந்த வீட்டின் அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தினார். தீபாவளிக்காக வீட்டில் பட்டாசுகளை அதிகளவு வாங்கி இருப்பு வைத்ததால், விபத்து நேரிட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/accident/two-died-in-namakkal-fire-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக